ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

விருத்தாசலம் - 606001

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

மாசிமகப் பெருவிழா - 2020. ௮ழைப்பிதழை பார்க்க - இங்கே கிளிக் செய்யவும்.


ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்
சமீபத்திய செய்திகள் 

மாசிமகப் பெருவிழா - 2020. ௮ழைப்பிதழை பார்க்க

- இங்கே கிளிக் செய்யவும்.
கோவில் விவரங்கள்

கோவில் பெயர் : ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

மூலவர் : விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)

அம்மன்/தாயார்: விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி)

தல விருட்சம்: வன்னிமரம்

தீர்த்தம்: மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்

ஆகமம்/பூஜை: காமிகம்

புராண பெயர்: திருமுதுகுன்றம்

ஊர்: விருத்தாச்சலம்

மாவட்டம் : கடலூர்

மாநிலம் : தமிழ்நாடு


வரலாறு

வரலாறு

திருவிழா

பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள் 9 வது நாள் தேர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும். ஆடிப்பூரம் - 10நாட்கள் திருவிழா - அம்பாள் விசேசம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா - ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் வசந்த உற்சவம். - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித்திருமஞ்சனம்,ஆருத்ரா தரிசனம் , கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது.


திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

தலபெருமை

சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் : ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்து உள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலக்காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இது போல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே ஐந்து:
இக்கோயிலில் எல்லாமே ஐந்துதான்.

ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.

இறைவனின் ஐந்து திருநாமம்:
விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர்,  விருத்தகிரி.

ஐந்து விநாயகர்:
ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர்,  முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: உரோமச முனிவர், விபசித்து   முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து கோபுரம்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய  திருச்சுற்று,  வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து கொடிமரம்:
இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு  இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று  பெயர்.



வரலாறு

அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்'  என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை.  சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான்   தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.



தொடர்புக்கு

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்
விருத்தாசலம்
+91- 4143-230 203

கோயில் விவரங்கள்

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

விருத்தாசலம் - 606001

+91- 4143-230 203

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Top